உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மத்திய ஆய்வு குழுவிடம் அமைச்சர் கணேசன் மனு

மத்திய ஆய்வு குழுவிடம் அமைச்சர் கணேசன் மனு

நெல்லிக்குப்பம், : கடலுார் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெற்று தர வேண்டுமென மத்திய குழுவினரிடம் அமைச்சர் கணேசன் மனு அளித்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கஸ்டம்ஸ் சாலை அடித்து செல்லப்பட்டது.இதை நேற்று பார்வையிட மத்திய குழுவினர் வந்திருந்தனர். அப்போது அமைச்சர் கணேசன் அவர்களிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:பெஞ்சல் புயலால் கடலுார் மாவட்டம் அதிகளவு சேதத்தை சந்தித்துள்ளது. பெரிய மற்றும் சிறிய பாலங்கள் பல அடித்து செல்லப்பட்டது.ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்தன.பல லட்சம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாதித்தனர். பல ஆயிரம் மக்களின் வீடுகள் முற்றிலும் இடிந்து சேதமானது.பல லட்சம் ஏக்கர் பரப்பில் நெல்,வாழை,கரும்பு,மக்காசோளம் போன்ற பல பயிர்கள் முற்றிலும் சேதமானது.ஆற்றின் கரையோரம் உள்ள நிலங்களில் மண் புகுந்து மண் மேடாகியது.விவசாயம் பெரிதும் பாதித்துள்ளது.மீண்டும் அவர்கள் விவசாயம் செய்வதில் சிரமம் உள்ளது.எனவே ஒன்றிய அரசிடம் கடலுார் மாவட்ட பாதிப்புகளை எடுத்து கூறி அதிக நிதி பெற்று தர வேண்டுமென மனுவில் அமைச்சர் கணேசன் கூறியுள்ளார்.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, தி.மு.க ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், பேரூராட்சித் தலைவர் ஜெயமூர்த்தி, செயல் அலுவலர் சண்முகசுந்தரி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !