உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு  

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைப்பு  

சிதம்பரம்:வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாய்க்கால் துார்வாரும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். வடகிழக்கு பருவமழை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட தில்லையம்மன் வாய்க்கால் மற்றும் பாசிமுத்தான் ஓடையில் துார்வாரும் பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சப் கலெக்டர் மாலதி, நகராட்சி கமிஷனர் மல்லிகா, இன்ஜினியர் சுரேஷ், பொதுப்பணி துறை செயற்பொறியாளர் காந்தரூபன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், வெங்கடேசன், ராஜன், தாரணி, சுதா, கல்பனா, வளர்மதி, நகர துணை செயலாளர் கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன் உடனிருந்தனர். தொடர்ந்து, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடிகால் துார்வாரும் பணியை பார்வையிட்ட பின், அமைச்சர் பன்னீர்செல் வம் கூறிய தாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் ஆற்றங்கரையோர பகுதிகள், வாய்க்கால்கள், மழைநீர் செல்லும் வடிகால் உள்ள இடங்களில் மழை நீர் எளிதில் செல்லும் வகையில் துார்வாரப்படுகிறது. சிதம்பரம் நகராட்சியில் உள்ள 34.15 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்கள், 174 சிறு பாலங்கள், ஒரு பெரிய பாலம் துார்வாரப்படுகிறது. சிதம்பரம் மின் நகர் மற்றும் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஓமக்குளத்தில் பிரதான மழை நீர் வடிகால் வாய்க்காலை துார்வாரி மேம்பாடு செய்திடும் வகையில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன. பாசிமுத்தான் ஓடை மற்றும் சிவகாமசுந்தரி ஓடையில் 10 கி.மீ., துாரத்திற்கு ஆகாய தாமரைகள் அகற்றும் பணி 16 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்கிறது. மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சிதம்பரம் அருகே மணல் அள்ளிய குளத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 2 மாணவர்களின் குடும்பங்களுக்கு 6 லட்சம் ரூபாய் நிதியுதவிக்கான காசோலை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ