மேலும் செய்திகள்
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
2 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
3 hour(s) ago
தில்லைக்காளி கோவிலில் காணிக்கை உண்டியல் திறப்பு
3 hour(s) ago
சோழக்கூரில் குடிநீர் கேட்டு ஊராட்சி அலுவலகம் முற்றுகை
4 hour(s) ago
விருத்தாசலம்: மாவட்டத்தில் பாசன வாய்க்கால்கள் துார்ந்து முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால், ஏரிப்பாசனம் பெறும் விவசாயிகள் தண்ணீரின்றி தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் வீராணம், பெருமாள், வாலாஜா, வெலிங்டன் என பழமையான ஏரிகள் மூலம் நெல், வாழை, எள், உளுந்து, வேர்க்கடலை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், டெல்டா பாசனம் இல்லாத மங்களூர், நல்லுார், விருத்தாசலம், கம்மாபுரம், பண்ருட்டி, கடலுார் ஆகிய ஆறு வட்டாரங்களில் நெல், எள், மக்காச்சோளம், உளுந்து, வாழை, பூக்கள் சாகுபடியே பிரதானமாக செய்யப்படுகிறது. இங்கு பருவமழை மற்றும் மணிமுக்தாறு, வெள்ளாறு, தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறுகள் வாயிலாக ஆற்றுப்பாசனம் மூலம் கிடைக்கும் நீரை நம்பியே விவசாயம் செய்கின்றனர். இவற்றில் நீர்வரத்து இல்லாத நிலையில், விவசாயப் பணிகள் முற்றிலும் தடைபடும் அபாயம் உள்ளது. கடந்த காலங்களில் வீராணம், பெருமாள், வாலாஜா, வெலிங்டன் மற்றும் விருத்தாசலம் மேமாத்துார் அணைக்கட்டு ஆகியவற்றின் பாசன வாய்க்கால்கள் வழியாக 50க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு கிடைத்தது. இதனால் விவசாயமும் பாதிக்காமல், குடிநீருக்கும் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனதால் நீர்த்தேக்கங்கள் மட்டுமல்லாது ஆறுகளும் வறண்டன. இதனால் ஏரிகளில் நீர்ப்பிடிப்பு இல்லாமல், குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், ஏரிகளில் இருந்து பிரிந்து வரும் பாசன வாய்க்கால்கள், பிரிவு வாய்க்கால்களில் சம்பு, கருவேலம், காட்டாமணி செடிகள் மண்டி துார்ந்து கிடக்கிறது. இதனால், ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், அவை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த காலங்களில் பருவமழைக்கு கிடைத்த மழைநீரில் பகுதியளவு நீர், துார்ந்து கிடக்கும் வாய்க்கால் வழியாக தண்ணீர் வழிந்தோட முடியாமல், கிராம சாலைகளிலும், நெடுஞ்சாலையிலும் வழிந்தோடி வீணாகியது. இதே நிலை, நடப்பாண்டிலும் தொடரும் அவலம் உருவாகியுள்ளது. ஏரிகளின் பாசன வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரை மடைகட்டி, விவசாயிகள் பயிர்களை காப்பாற்றி வந்தனர். ஆனால், வாய்க்கால்கள் துார்ந்து கிடப்பதால், வரும் மழைக்காலத்திலும் ஏரிகளுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பாசன வாய்க்கால்களை முழுமையாக துார்வாரி, மழைநீர் முழுவதுமாக ஏரிகளுக்கு கிடைக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா பகுதியில் ஆண்டுதோறும் 80 கோடி ரூபாயில் பாசன வாய்க்கால்களை துார்வாரி, காவிரி நீரை முறையாக பயன்படுத்த பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கிறது.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago