மேலும் செய்திகள்
அங்கன்வாடி திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
02-Apr-2025
கடலுார் : கடலுார் சட்டசபை தொகுதியில் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாமில், 3,451 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கடலுார் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் பிரவீன் அய்யப்பன் ஏற்பாடுகளை செய்து வரவேற்றார்.எம்.ஆர்.எப்., ஹூண்டாய், பிரேக்ஸ் இன்டியா மற்றும் தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தன. இதில், கடலுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்றனர். முகாமில் 3,451 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணையை அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கினார். சத்தியசேகர், சதன் பவர் டெக் பூங்குன்றன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதிபெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் தினகரன், மாநகர கவுன்சிலர்கள் சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், கீர்த்தனா ஆறுமுகம், முத்து, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
02-Apr-2025