மேலும் செய்திகள்
அரசு பெண்கள் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா
09-Dec-2024
வேப்பூர்,: வேப்பூர் அருகே புதிய கலையரங்கம் கட்டடத்தை விருத்தாசலம் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் ரூ. 6 லட்சத்தில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.மாவட்ட கவுன்சிலர் சக்திவிநாயகம், காங்., முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் மனோகரன் வரவேற்றார். விருத்தாசலம் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் கலையரங்கத்தை திறந்து வைத்தார். நல்லூர் பி.டி.ஓ., சண்முக சிகாமணி, தி.மு.க., ஒன்றிய துணைச் செயலர் அன்புக்குமரன், காங்., வட்டார தலைவர்கள் முருகானந்தம், ராவணன், வழக்கறிஞர் தமிழ்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Dec-2024