மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி எம்.எல்.ஏ., வழங்கல்
04-Jun-2025
நெய்வேலி: வடக்குத்து ஊராட்சியில் ரூ. 3 கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.நெயவேலி தொகுதிக்குட்பட்ட வடக்குத்து ஊராட்சியின் கீழ் வடக்குத்து, மேல் வடக்குத்து, மாருதி நகர், சக்தி நகர், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ., ராமச்சந்திரன், இன்ஜினியர் அனுஷா, மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைவர் ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, துணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், மருத்துவரணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் ராஜேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சடையப்பன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பாக்கியராஜ், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் உளளிட்டோர் பங்கேற்றனர்.
04-Jun-2025