வாலிபால் போட்டியில் வெற்றி எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் என்.எல்.சி., பள்ளி மைதானத்தில் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நெய்வேலியில் நடந்தது. போட்டியை முன்னாள் அமைச்சர் சண்முகம் துவக்கி வைத்தார்.இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், பண்ருட்டி, வடலுார் உள்ளிட்ட பகுதியில் இருந்து 23 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் கடலுார் முதுநகர் அணி முதல் பரிசையும், கருங்குழி ஏ.வி.எஸ். அணி இரண்டாம் பரிசையும், நெய்வேலி அம்மா ஸ்போர்ட்ஸ் கிளப் மூன்றாம் பரிசையும், பாச்சிரப்பாளையம் அணி நான்காம் பரிசையும், கண்டரக்கோட்டை அணி நான்காம் பரிசையும் வென்றது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார். நகர செயலாளர் மனோகரன், வழக்கறிஞர் முகமதுநாசர், இளைஞரணி ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட ஜெ., பேரவை தலைவர் ராஜவர்மன், மாவட்ட மருத்துவரணி இணை செயலாளர் பிரியதர்ஷன் உட்பட பலர் பங்கேற்றனர்.