கல்லுாரி மாணவர்களுக்கு எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்
கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., அறக்கட்டளை நிதி மூலம், தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லுாரிக்கு, அய்யப்பன் எம்.எல்.ஏ., அறக்கட்டளை மூலம், ௩ லட்சம் ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் கீதா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இதில், இளங்கலை தமிழ் இலக்கியம், முதுகலைத் தமிழ் இலக்கியம், பொதுத்தமிழ் பிரிவுகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 9 மாணவ, மாணவியருக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.துறை தலைவர்கள் நிர்மல்குமார், ஆனந்தராஜ், சுசிகணேஷ், சின்னதுரை, சீனுவாசன், இளவரசன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இணை பேராசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார்.