வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கல்
கடலுார், : கடலுார் ஒன்றியத்தில், வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.பெஞ்சல் புயல், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலுார் ஒன்றியம் மதலப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, மேல் அழிஞ்சிப்பட்டு, கீழ்குமாரமங்கலம், காரணப்பட்டு, செல்லஞ்சேரி, புதுக்கடை, சிங்கிரிகுடி பகுதிகளை அய்யப்பன் எம்.எல்.ஏ., பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதிகளை சேர்ந்த 2,000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். அப்போது, கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஜெயமூர்த்தி, சுதாகர், நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர்கள் தமிழரசி பிரகாஷ், கனகராஜ், இந்திரா விஜயன், குமார், செல்வராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சேகர், பார்த்திபன், நிர்வாகிகள் பிரகாஷ், சுரேஷ், நட்ராஜ், ரமேஷ், முருகவேல், விநாயகம் உடனிருந்தனர்.