உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரணம் வழங்கல்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கிராமத்தில் வீடு தீப்பிடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. எறும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி - சின்னம்மாள் தம்பதி. இவர்களது கூரை வீடு நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுதும் சேதமானது. தகவல் அறிந்த புவனகிரி அ.தி.மு.க., எம்.எல்,ஏ., அருண்மொழிதேவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராமமூர்த்தி தம்பதியினருக்கு ஆறுதல் கூறி வேட்டி, சேலை, அரிசி பணம் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்கினார். ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாநில துணைச் செயலாளர் அரு ளழகன், முன்னாள் சேர்மன் லட்சுமிநாராயணன், ஜெயசீலன், ஒன்றிய பொருளாளர் சங்கரநாராயணன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராசு, சபரி உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி