உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  எம்.எல்.ஏ., நிவாரணம்

 எம்.எல்.ஏ., நிவாரணம்

பரங்கிப்பேட்டை: கன மழையால், வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார். பரங்கிப்பேட்டையில், பெய்த கன மழையால் அகரம் ரயிலடியை சேர்ந்த அன்புக்கரசி என்பவருடைய வீடு இடிந்து விழுந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., நேரில் சென்று, ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். அவருடன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பாசறை செயலாளர் வசந்த், நகர ஜெ., பேரவை செயலாளர் சந்தர் ராமஜெயம், நகர இளைஞரணி செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட ஜெ., பேரவை துணை செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் சக்கரவர்த்தி, கருணாகரன், ராமு உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ