வடலுார் சபையில் மாத ஜோதி தரிசனம்
வடலுார் : வடலுார் சத்திய ஞான சபையில், ஜோதி தரிசனம் நடந்தது வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் உள்ளது. இங்கு மாதந்தோறும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. ஆவணி மாத ஜோதி தரிசனம் நேற்று முன்தினம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சத்திய ஞான சபை, தருமசாலை மற்றும் கல்பட்டு ஐயா சமாதி உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பூஜை நடந்தது.