உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  மொபட் எரிந்து சேதம்

 மொபட் எரிந்து சேதம்

பெண்ணாடம்: மர்மமான முறையில் மொபட் எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பெண்ணாடம் அடுத்த அரியராவியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 67; விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் தனது மொபட்டை வழக்கம் போல் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு துாங்க சென்றார். அதிகாலை 5:00 மணியளவில் எழுந்து பார்த்தபோது, மொபட் எரிந்து கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். இதுகுறித்து, வெங்கடாசலம் கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !