மார்கழி பூஜை துவக்கம்
விருத்தாசலம்; விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.மார்கழி மாதம் துவங்கியதை யடுத்து, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ஆழத்து விநாயகர், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பொங்கல் பண்டிகை வரை மார்கழி மாத வழிபாடு நடக்க உள்ளது.மேலும், சுவாமி சன்னதியில் உள்ள பிந்து மாதவப் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள், பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு துவங்கியது.