உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மேம்பாலம் சீரமைப்பு வாகன ஓட்டிகள் வரவேற்பு

மேம்பாலம் சீரமைப்பு வாகன ஓட்டிகள் வரவேற்பு

பெண்ணாடம்: 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி காரணமாக, பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் சேதமடைந்த கான்கிரீட், இரும்பு பிளேட்டுகள் உள்ளிட்ட பகுதிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டது.பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. மேம்பாலத்தில் பல இடங்களில் கான்கிரீட் விரிசல், இரும்பு பிளேட்டுகள் சேதமடைந்து காணப்பட்டன. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பணியாளர்கள் சேதமடைந்த கான்கிரீட், இரும்பு பிளேட்டுகளை சீரமைத்தனர்.இந்த செயல் வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி