உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீரப்பாளையம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கீரப்பாளையம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புவனகிரி : கீரப்பாளையம் - பண்ணப்பட்டு சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். புவனகிரி, கீரப்பாளையத்தில் இருந்து வாள் காரைமேடு, பொன்னேரி வழியாக பண்ணப்பட்டு உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. சாலையில் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது, பெய்த மழையில் பள்ளத்தில் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பதற்கான அறிகுறி தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சிதம்பரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வீரசோழகன் சாலையில் இரு பக்கமும் கருவேல முட்புதர்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை