விருத்தாசலத்தில் கனமழை வாகன ஓட்டிகள் அவதி
விருத்தாசலம், : விருத்தாசலத்தில் பெய்த கனமழையின் காரணமாக, முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர். விருத்தாசலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று பகல் 3:00 மணியளவில் விருத்தாசலம் பகுதியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, விருத்தாசலம் பஸ் ஸ்டேண்ட், பாலக்கரை, கடைவீதி ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், சாலையில் சென்ற வாகனங்கள், வெள்ளத்தில் நீத்திச் சென்றன. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.