உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நல்லாத்துார் சாலை பழுது வாகன ஓட்டிகள் அவதி

நல்லாத்துார் சாலை பழுது வாகன ஓட்டிகள் அவதி

கடலுார் : நல்லாத்துார் மெயின்ரோட்டில் (சாயல்) இருந்து ஊருக்குள் செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தவளக்குப்பம் - மடுகரை சாலை நல்லாத்துார் மெயின்ரோட்டில் (சாயல்) இருந்து ஊருக்குள் வரும் சாலையில் ஏராளமான கார்கள், பள்ளி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் சென்று வருகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை பராமரிப்பு இல்லாமல் பாழாய்போனது. ஜல்லிகள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றநிலையில் உள்ளது. தார் சாலை என்பதற்கான அறிகுறியே இல்லாமல் உள்ளது. இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலையின் நிலை மோசமாக உள்ளது. அப்படியே சென்றாலும் கூர்மையான ஜல்லிகள் குத்தி வாகனங்களின் டயர்கள் பஞ்சாராகி விடுகின்றன. இதனால் பள்ளிக்கு, அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை