உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குண்டும், குழியுமான தார் சாலை உச்சிமேட்டில் வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான தார் சாலை உச்சிமேட்டில் வாகன ஓட்டிகள் அவதி

கடலுார் : கடலுார் அருகே உச்சிமேடு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலுார் - புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பெரியகங்கணாங்குப்பம் கிராமத்தில் இருந்து சாலை பிரிந்து உச்சிமேடு, நாணமேடு, சுப உப்பலவாடி கிராமங்களுக்கு செல்கிறது. இந்த சாலை கடற்கரை வரை மொத்தம் 4 கி.மீ., நீளத்துக்கு உள்ளது. அதில், தற்போது 2.5 கி.மீ., துாரத்திற்கு கடற்கரையில் இருந்து உச்சிமேடு வரை சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள 1.5 கி.மீ., சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. சமீபத்தில் இந்த சாலையில் தார் ஊற்றி பேட்ஜ் ஒர்க் செய்தனர். பேட்ஜ் ஒர்க் முடிந்த ஒரு சில மாதங்களில் முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு லாயக்கற்ற சாலையாக மாறியுள்ளது. சாலை முழுவதும் கடைகளாக இருப்பதால் ஆங்கங்கே போர்டு வைத்து ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். இதனால் சாலை மிகவும் குறுகலாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை