உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனை முன், மா.கம்யூ., சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர குழு உறுப்பினர் பாபு தலைமை தாங்கினார். கருணாகரன், பூபதி, பழனி, தமிழ்மணி, ஷாஹிரா முத்து முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநகர செயலாளர் அமர்நாத், மருதவாணன், வெங்கடேசன் காசிநாதன், மனோகரன், பாலு பச்சையப்பன் உட்பட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 'கடலுார் அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி நவீனப்படுத்த வேண்டும்; சிறப்பு சிகிச்சை பிரிவுகளை உருவாக்க வேண்டும்; அனைத்து பிரிவுகளிலும் போதிய டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும்; புதுச்சேரிக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ