உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில அளவிலான கதை சொல்லும் போட்டி விருதை நகராட்சி பள்ளி மாணவர் தேர்வு

மாநில அளவிலான கதை சொல்லும் போட்டி விருதை நகராட்சி பள்ளி மாணவர் தேர்வு

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சிப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர், மாநில அளவிலான கதை சொல்லும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இலக்கிய மன்ற போட்டிகள் நடத்தி வருகிறது. நடப்பாண்டில், விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆறாம் வகுப்பு மாணவர் வீரராகவன், வட்டார அளவிலான இலக்கிய போட்டியில், கதை சொல்லும் போட்டியில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து, மாவட்ட அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்து, வரும் 11ம் தேதி, கோவையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று, சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவர் வீரராகவன், பயிற்சி அளித்த ஆசிரியை வாசுகி ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலா வாழ்த்து தெரி வித்தார். மேலும், நகராட்சித் தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், மாணவரை அழைத்து சால்வை அணிவித்து, பரிசு வழங்கி வாழ்த்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் எழிலரசி, கலாவதி, அல்லம்மா பிரபு, அனுசுயா, விஜயதரணி, சுசீலா, கோவிந்தராஜன், மேரிபிலோமினா, சசிகலா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை