உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு நேற்று செடல் திருவிழா நடந்தது. திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் 24ம் தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று 25ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு செடல் திருவிழா துவங்கியது. இரவு 7:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. இன்று 26ம் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி