உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பரவும் மர்ம காய்ச்சல்: நகர மக்கள் அச்சம்

பரவும் மர்ம காய்ச்சல்: நகர மக்கள் அச்சம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நெல்லிக்குப்பத்தில் கடந்த சில நாட்களாக மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்தால் அது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுகிறது. நகர பகுதியில் 4 தனியார் டாக்டர்கள் மட்டுமே உள்ளனர்.ஒவ்வொருவரும் தினமும் 100 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகலில் மட்டும் பணியாற்றும் ஒரு டாக்டரும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.அரசு மருத்துவமனையிலும் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சுகாதாரத் துறை அதிகாரிகள் முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், 'கடும் வெயில் காரணமாக வெளியே சென்று வருபவர்கள் உடனடியாக குளிர்ந்த நீரில் முகம் கழுவக் கூடாது.வியர்வை அடங்கிய பிறகே முகம் கழுவ வேண்டும். வெயிலில் வியர்வை அதிகம் வெளியேறுவதால் குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தற்போது பரவும் காய்ச்சல் 2 நாட்களுக்கு நீடிக்கிறது. முறையான சிகிச்சை பெற்றால் அச்சப்பட தேவையில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி