உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாயமான தொழிலாளிசடலமாக மீட்பு

மாயமான தொழிலாளிசடலமாக மீட்பு

பரங்கிப்பேட்டை: புவனகிரி அடுத்த மேலமணக்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்,44; தொழிலாளி. இவர், கடந்த 10ம் தேதி டீ குடிக்க கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து, தேடிவந்தனர். இந்நிலையில் இன்று (அக்.,24) வடக்குத்திட்டை ஐயனார் கோவில் அருகே காட்டுபகுதியில் துர்நாற்றம் வீசியது. தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் கல்யாணசுந்தரம் உடல் மீட்டனர். விசாரணையில், அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதன்பேரில் புவனகிரி போலீசார் ஏற்கனவே பதிவு செய்த வழக்கை, தற்கொலை வழக்காக பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை