உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தமிழில் பெயர் பலகை ஆலோசனைக் கூட்டம்

தமிழில் பெயர் பலகை ஆலோசனைக் கூட்டம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கடலுார் மாவட்டத்தில் 15ம் தேதிக்குள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதனை நெல்லிக்குப்பம் நகராட்சியில் நடைமுறைபடுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் ஞானபிரகாசம், வர்த்தக சங்க செயலாளர்கள் ராமலிங்கம், மணிவண்ணன், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தமிழக அரசின் உத்தரவுபடி உடனடியாக தமிழில் பெயர் பலகை வைப்பதாக வர்த்தக சங்கத்தினர் உறுதியளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ