பெயர் பலகை திருத்தம்
கடலுார் : விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலையில் உள்ள பெயர்ப்பலகைகளில் இருந்த எழுத் துப்பிழை, 'தினமலர்' செய்தி எதிரொலி காரணமாக திருத்தப்பட்டன. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் நகர்களுக்குள் செல்லா மல் நாகப்பட்டினம் வரை செல்லும் புறவழிச்சாலை உள்ளது. இதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், கடலுார் அருகே சாவடியில் கிராமங்களின் பெயர்களை குறிப்பிடும் வகையில் வைக்கப்பட்ட பெயர்ப்பலகைகளில் எழுத்துப் பிழைகள் இருந்தன. நத்தப்பட்டு என்பதற்கு பதிலாக நடப்பட்டு என்றும், கோண்டூர் என்பதற்கு பதிலாக கொண்டூர் என்றும் இருந்தது. இது வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதால், இதுகுறித்து 'தினமலர்' நாளி தழில் செய்தி வெளியிடப் பட்டது. அதனைத் தொடர்ந்து, தவறாக இருந்த ஊர்களின் பெயர்கள் திருத்தம் செய்யப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.