மேலும் செய்திகள்
சதுரங்கத்தில் சாதிக்க பயிற்சியே உறுதுணை
14-Nov-2024
கடலுார் ; கடலுார் மாவட்ட மைய நுாலகத்தில் தேசிய நுாலக வார விழாவையொட்டி, சதுரங்க போட்டி நடந்தது.மாவட்ட நுாலக அலுவலர் (பொறுப்பு) சக்திவேல் தலைமை தாங்கினார்.வாசகர் வட்டத் தலைவர் பாஸ்கரன், கவுரவ தலைவர் தங்க சுதர்சனம், ஒருங்கிணைப்பாளர் பால்கி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ஜானகிராஜா வாழ்த்துரை வழங்கினார். வி ஸ்கொயர் மால் உரிமையாளர் டாக்டர் அனிதா ரமேஷ் சிறப்புரையாற்றினார். மாநகராட்சி கமிஷனர் அனு கலந்து கொண்டு சதுரங்க போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சதுரங்க போட்டி பயிற்சியாளர் பிரேம்குமார் நடுவராக செயல்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களை தேர்வு செய்தார்.முதல்நிலை நுாலகர் (பொறுப்பு) ஆறுமுகம் நன்றி கூறினார்.
14-Nov-2024