உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், அறக்கட்டளை தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினர். முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். கருத்தரங்கில் 22 கல்லுாரிகளை சேர்ந்த 550க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் திலக்குமார், ஆரோக்கிய அருள்தாஸ், முத்துக்குமரன், வாசுதேவன் மற்றும் தமிழ்ச்செல்வி நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை துறை தலைவர் சிவராமன், ஒருங்கிணைப்பாளர்கள் அல்கா செலின், குணசீலன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ