மேலும் செய்திகள்
செய்தி வரிகளில்..
04-Oct-2024
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் தேசிய ஒருமைப்பாட்டு தின விழா நடந்தது.சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இப்பள்ளியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு தின விழாவில், பள்ளி முதல்வர் சீனுவாசன் தலைமை தாங்கினார். தாளாளர் இந்துமதி சீனுவாசன் முன்னிலை வகித்தார்.உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு வாழ்த்திப் பேசினர். மாணவ, மாணவிகள் 28 மாநிலங்களின் பாரம்பரிய உடையணிந்து, அம்மாநில மொழிகளில் வணக்கம் கூறி அணிவகுத்து சென்றனர். சர்தார் வல்லபாய் பட்டேலின் சிறப்புகள் எடுத்துக் கூறப்பட்டது.
04-Oct-2024