உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

என்.சி.சி., மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

சிதம்பரம்: லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி., மாணவர்கள் சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தலைமை ஆசிரியர் நாராயணசாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். என்.சி.சி., மாணவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். ஊர்வலத்தில், சுபேதார் ராமிரெட்டி, அவுல்தார் ஷிஜித், என்.சி.சி., அலுவலர் வேலழகன், உடற்கல்வி ஆசிரியர் ராஜவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !