உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., ஆண்டு விழா கல்வி உபகரணம் வழங்கல்

தே.மு.தி.க., ஆண்டு விழா கல்வி உபகரணம் வழங்கல்

விருத்தாசலம் : விருத்தாசலம், வயலுார் நகராட்சி துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு தே.மு.தி.க., 21ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நகர செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இளைஞரணி செயலாளர் சக்கரபாணி முன்னிலை வகித்தார். நகர துணை செயலாளர் கெஜலட்சுமி இளங்கோவன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு, கல்வி உபகரணங்கள் வழங்கினார். நகர தலைவர் சங்கர், துணை செயலாளர் மலர் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் பாலா செந்தில், பாலமுருகன், மகேஷ், கேப்டன் மன்ற செயலாளர் ஜெகதீசன், தொண்டரணி மாணிக்கவாசகம், தலைமை ஆசிரியர் வெங்கட சுப்பிரமணியன், உதவி தலைமை ஆசிரியர் கனகவல்லி, தன்னார்வலர் அம்பிகா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை