உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நிதி நிறுவன ஊழியரை வெட்டிய 2 பேருக்கு வலை

நிதி நிறுவன ஊழியரை வெட்டிய 2 பேருக்கு வலை

கடலுார்: தனியார் நிதி நிறுவன ஊழியரை கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள் இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.கடலுார், புதுவண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் ராஜேஷ்,24; தனியார் நிதி நிறுவன ஊழியர். இவர், நேற்று மாலை திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே மேம்பாலம் வழியாக பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். சூரப்பநாயக்கன்சாவடி அருகே சென்றபோது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், ராஜேஷை வழிமறித்து கத்தியால் தலையில் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ராஜேஷை, அங்கிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ