உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதி யில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி நடந்தது. மந்தாரக்குப்பம் பகுதியில் ஏராளான தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி கே.வி.ஆர்., நகர், துரைராஜ் நகர், என்.ஆர்.சி., நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி நடந்தது. கால்நடை மருத்துவர் கோமகன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார். செயல் அலுவலர் மகேஸ்வரி, துப்பரவு ஆய்வாளர் முகமது யாசிக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை