உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இந்திரா நகர் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு

இந்திரா நகர் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு

நெய்வேலி : நெய்வேலி, இந்திரா நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கனிம வளத்துறை சார்பில் ரூ. 90 லட்சம் செலவில் கட்டப்பட்ட நான்கு வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.இதனையொட்டி பள்ளியில் நடந்த விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர் தலைமை தாங்கினார். பண்ருட்டி முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், ஒன்றிய செயலாளர் குணசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோவன், தலைமை ஆசிரியர் ரமாமணி குத்துவிளக்கேற்றினர்.விழாவில், பொதுப்பணித்துறை இன்ஜினியர் ஜெய்பிரகாஷ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய அவைத் தலைவர் வீரராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி கோபு, வர்த்தக சங்க நிர்வாகி சேகர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் சிவசுந்தரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !