உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதிய குடிநீர் தொட்டி : கிராம மக்கள் கோரிக்கை

புதிய குடிநீர் தொட்டி : கிராம மக்கள் கோரிக்கை

பெண்ணாடம்: வடகரையில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லுார் ஒன்றியம், வடகரை ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராம மக்கள் குடிநீர் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. போதிய பராமரிப்பின்றி நாளடைவில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, ஆபத்தான நிலையில், நாளுக்குநாள் வலுவிழந்து வருகிறது. இதனால் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டு, நேரடியாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் போதிய அளவு குடிநீர் கிடைக்காததால் கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, வடகரையில் புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !