உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திட்டக்குடி கல்லுாரியில் புதிய ஆய்வகம் திறப்பு

திட்டக்குடி கல்லுாரியில் புதிய ஆய்வகம் திறப்பு

திட்டக்குடி : திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் புதிய ஆய்வக கட்டடம் திறக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ராஜசேகர் தலைமை தாங்கினார். முன்னாள் கல்லூரி முதல்வர் அழகேசன், நகராட்சி துணை சேர்மன் பரமகுரு, நகராட்சி கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர் முன்னிலை வகித்தனர்.கல்லுாரி வளாகத்தில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தில் 1 கோடியே 76 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட இயற்பியல், வேதியியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் கொண்ட 4 ஆய்வகம் கொண்ட கட்டடத்தை, நகராட்சி சேர்மன் வெண்ணிலா கோதண்டம், மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.பேராசிரியர்கள், கல்லுாரி அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை