மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
26-Sep-2024
கடலுார் : கடலுார் நியூ மில்லேனியம் கல்வியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், மாவட்ட சிறப்பு நீதிபதி ஆனந்தன் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.கடலுார் குமாரப்பேட்டை நியூ மில்லேனியம் கல்வியியல் கல்லுாரி 12வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு நியூ மில்லேனியம் பவுண்டேஷன் சொசைட்டி தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சதிஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட சிறப்பு நீதிபதி ஆனந்தன், 175 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசினார்.நியூ மில்லேனியம் பவுண்டேஷன் சொசைட்டி இயக்குனர்கள் டாக்டர் ராஜேந்திரன், நடராஜன் முதல் மதிப்பெண் பெற்ற பட்டதாரிகளுக்கு பதக்கம் வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சந்தானகிருஷ்ணன், அருள், சீனுவாசன், நியூ மில்லேனியம் பவுண்டேஷன் சொசைட்டி இயக்குனர்கள், கல்லுாரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிர்வாக இயக்குனர் ஆனந்தஜோதி நன்றி கூறினார்.
26-Sep-2024