புத்தாண்டு கொண்டாட்டம்; சில்வர் பீச் களை கட்டியது
கடலுார்; ஆங்கில புத்தாண்டையொட்டி கடலுார் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குடும்பம் சகிதமாக குவிந்து பொழுதை கழித்தனர்.ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டிருந்ததால், காலை முதல் கடலுார் சில்வர் பீச்சில் குடும்பத்தினருடன் குவிந்தனர். சிறுவர்கள் சில்வர் பீச்சில் உள்ள மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.சிலர் தாம் கொண்டுவந்த உணவு பண்டங்களை கடற்கரையில் சாப்பிட்டு மகிழ்ந்தனர். நேற்றைய நாள் முழுவதையும் சில்வர் பீச்சிலேயே கழித்தனர். மாலை இருட்டியதும், பாதுகாப்பு கருதி போலீசார் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தினார். அதன் பிறகு களைந்து சென்றனர். கடற்கரையில் யாரும் இறங்காத அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.