உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடவாற்றில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி

வடவாற்றில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை இறந்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த சந்தை தோப்பு, பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்,34; கொத்தனார். நேற்று முன்தினம் மாலை காட்டுமன்னார்கோவில் வடவாற்றில் குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மொபைல் போனில் தொடர் கொண்டும் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து வடவாற்றிற்கு சென்று பார்த்த போது, பைக் இருந்தது. அவர் இல்லாததால் சந்தேகமடைந்து நடந்த சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ் ஸ்டேஷனக்கு தகவல் தெரிவித்தனர். வடவாற்றில், பல மணி நேர தேடுதலுக்கு பின்பு தினேஷ் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மனைவி பிரியதர்ஷினி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் ஆற்றில் குளித்த போது, நீரில் மூழ்கி இறந்தது தெரிந்தது. திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ