உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நெய்வேலி த.வா.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

 நெய்வேலி த.வா.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

வடலுார்: நெய்வேலி த.வா.க., வேட்பாளர் திருமால்வளவன், பிரசாரத்தை நிறைவு செய்தார். நெய்வேலி சட்டசபை தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் திருமால்வளவன் போட்டியிடுகிறார். அவர், நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். அப்போது, கேமரா சின்னத்திற்கு ஆதரவு கேட்டு, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் பிரசாரம் செய்து பேசினார். அவருடன் மாவட்ட செயலாளர் சிவகுமார், பூவராகமூர்த்தி, ரவிச்சந்திரன், அரங்கநாதன், அருள்குமார், ஒன்றிய செயலாளர்கள் நவநீதராமன், ராசு, தங்கபாண்டியன், சந்தோஷ்குமார், சுதாகர், விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், ராமதாஸ், வழக்கறிஞர் செல்வராஜ், ஆனந்தகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !