உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., தொழிலாளி மின்சாரம் தாக்கி காயம்

என்.எல்.சி., தொழிலாளி மின்சாரம் தாக்கி காயம்

நெய்வேலி,: என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த ஒப்பந்த தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விருத்தாசலம் அடுத்த அதியமான்குப்பம், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை,32; இவர், நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலையத்தின் 2வது யூனிட்டில் தனியார் காண்ட்ராக்டரிடம் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று காலை 12:00 மணிக்கு வழக்கம் போல் பாய்லரில் 20 அடி உயரத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டார். உடன், அருகில் இருந்த சக தொழிலாளர்கள் மீட்டு என்.எல்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !