உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிறப்பு, இறப்பு சான்று வழங்க ஆளில்லை

பிறப்பு, இறப்பு சான்று வழங்க ஆளில்லை

பண்ருட்டி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. சுகாதார பிரிவில் சுகாதார அலுவலர், 3 சுகாதார உதவி ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் 7 பேர் மற்றும் 77 நிரந்தர துப்புரவு தொழிலாளர்கள், தற்காலிக துப்புரவு ஊழியர்கள் 99 பேர் பணிபுரிகின்றனர். ஆனாலும், சுகாதாரத்துறையை வழிநடத்தும் அதிகாரிகள் இல்லாமல், நகரில் குப்பைகளை கூட முறையாக அள்ளப்படுவதில்லை என்ற புகார் உள்ளது.சுகாதார உதவி ஆய்வாளர் ஒருவருக்கு, இங்கு பணிபுரிய விருப்பமில்லாமல், ஒரு மாதத்திற்கு மேலாக விடுமுறையில் உள்ளார். சுகாதார அலுவலரும் இருப்பதில்லை. விடுமுறையிலேயே காலத்தை ஓட்டி வருகிறார்.பிறப்பு, இறப்பு சான்றுக்கு விண்ணப்ப பெற கூட அலுவலகத்தில் யாரும் இல்லாததால், விண்ணப்பம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாகியும் கிடைக்காமல் தவியாய் தவித்து வருகின்றனர். இதுபோன்று நகராட்சியில் அனைத்து பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பாதிக்காத வகையில், சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ