உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வடகிழக்கு பருவ மழை கடலுார் எஸ்.பி., ஆய்வு  

வடகிழக்கு பருவ மழை கடலுார் எஸ்.பி., ஆய்வு  

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், மீட்பு உபகரணங்களை எஸ்.பி.,ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எஸ்.பி.,ஜெயக்குமார் ஆய்வு செய்தார். ஆய்விற்கு பிறகு எஸ்.பி.,கூறும் போது, ''வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவைப்படும் உபகரணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற 170 போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்ட தயார் நிலையில் உள்ளனர். மேலும் மரம் அறுக்கம் எந்திரம், ஜெனரேட்டர், படகு உள்ளிட்ட 22 வகையான மீட்பு உபகரணங்கள் தயாராக உள்ளது. மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் படி பணியில் ஈடுபட தயாராக உள்ளோம் '' என்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை