செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
கடலுார்: கடலுாரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், எம்.ஆர்.பி.,செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.ஆர்.பி.,செவிலியர்களை விடுவிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கடலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில் எம்.ஆர்.பி.,செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செவிலியர் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் மற்றும் எம்.ஆர்.பி.,செவிலியர்கள் பங்கேற்றனர்.