மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
13-Nov-2024
விருத்தாசலம்; விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள் ஆர்.பரமசிவம், தங்கவேல், எஸ்.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய நிர்வாகிகள் முனுசாமி, பிச்சையம்மாள், கணேசன், நல்லதம்பி, பத்மாவதி, மாவட்ட செயலர் நாட்டுதுரை, மாவட்ட துணை தலைவர் ஆனந்தகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுமதி, மாவட்ட துணை தலைவர் கணபதி மற்றும் விருத்தாசலம், நல்லுார் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, ரூ.6,750 அகவிலைபடியுடன் வழங்க வேண்டும்.இலவச காப்பீடு திட்டத்தில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களை சேர்க்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13-Nov-2024