உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலத்தில் சீரமைப்பு பணி அதிகாரிகள் ஆய்வு 

பாலத்தில் சீரமைப்பு பணி அதிகாரிகள் ஆய்வு 

கடலுார்: பாலத்தில் சீரமைப்பு பணி தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடலுார், கம்மியம்பேட்டை, கெடிலம் ஆற்று பாலத்தில் இருபக்கமும் பக்கவாட்டு தடுப்பு கட்டைகள் சேதமடைந்துள்ளன. இதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதனையொட்டி சென்னை கோட்ட பொறியாளர் சசிகலா, விழுப்புரம் கோட்ட பொறியாளர் ேஹம லதா, கடலுார் கோட்ட பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் நேற்று பாலத்தில் எந்தெந்த இடத்தில் சேதமடைந்துள்ளன என் பது குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,'கம்மியம்பேட்டை பாலத்தில் சேதமடைந்துள்ள தடுப்பு கட்டைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்க உள்ளது' என்றார். இதேபோல, கடலுார் அண்ணா பாலத்திலும் சீரமைப்பு பணி தொடர்பாக ஆய்வு செய்தனர். உதவி கோட்ட பொறியாளர்கள் மணிவேல், சந்தோஷ்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை