உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரம் பல்கலையில் அதிகாரிகள் தர்ணா

சிதம்பரம் பல்கலையில் அதிகாரிகள் தர்ணா

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தனி அதிகாரிகள் மற்றும் தொடர்பு அதிகாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த ஏழு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும். 7வது குழு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 23 பேருக்கு இட மாறுதல் அளித்ததை கண்டித்து, நேற்று அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாத நிலையில், 2ம் தேதி 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ