உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூதாட்டி சடலம் மீட்பு

மூதாட்டி சடலம் மீட்பு

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி சடலத்தை போலீசார் மீட்டனர்.சேத்தியாத்தோப்பு அடுத்த சக்திவிளாகம் வெள்ளாற்றங்கரையில் நேற்று மதியம் அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் கிடந்தது. அவ்வழியாக சென்றவர்கள் ஒரத்துார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி அருகில் கிடந்த மொபைல் போனில் பதிவான எண்கள் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர்.இதில், இறந்தவர் சக்திவிளாகம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யாறு மனைவி கொளஞ்சி, 70; என்பதும், கீரை வியாபாரம் செய்ததும் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி