மேலும் செய்திகள்
ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
28-Oct-2024
பெண்ணாடம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் பிரபு, 40. இவர் நேற்று முன்தினம் மாலை பெண்ணாடம் போலீஸ் நிலையம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொது இடத்தில் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார். சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் வழக்குப் பதிந்து, பிரபுவை கைது செய்தார்.
28-Oct-2024