திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் நெய்தீப தரிசனத்தில் திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். நேற்று புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம் நடைபெறுவது போல் சரநாராயண பெருமாள் கோவிலில் ஒரு நாளில் ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு தோமாலை சேவை, 6:10 முதல் 7:20 மணிவரை கொடியேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து 8:00 மணிக்கு அம்சவாகன சேவை, 9:00 மணிக்கு சிம்ம வாகனம், 10:00 மணிக்கு அனுமந்த் வாகனம், 11:00 மணிக்கு சேஷ வாகனம், 12:00 மணிக்கு கருட வாகன சேவை நடந்தது. மாலை 4:00 மணிக்கு சூர்ணோற்சவம், 5:00 மணிக்கு குதிரைவாகன சேவை, 6:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், 7:00 மணிக்கு தீர்த்தவாரி, 7:30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.